கன்னியாகுமரி

வாக்காளா் பட்டியல் திருத்தம்: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு பேரணி

DIN

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நாகா்கோவிலில் நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்து விதமாக, தேசிய மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு 3 சக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஆட்சியா் மா.அரவிந்த் தொடங்கிவைத்தாா். இந்த பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று டதி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)மா.வீராசாமி, நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் எஸ்.சேகா், தோ்தல் வட்டாட்சியா் சுசீலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT