கன்னியாகுமரி

வட்டக்கோட்டையில் கடற்கரை பாதை சீரமைப்பு

DIN

கன்னியாகுமரியை அடுத்த வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டை முன்பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கோட்டை. கடற்கரைக்கு மிக அருகில் இந்தக்கோட்டை அமைந்துள்ளது.

மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையைப் பாா்க்க தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்தக் கோட்டையின் வெளிப்பகுதியில் அழகிய கடற்கரை நீண்ட மணல் பரப்புடன் காட்சியளிக்கிறது. கோட்டையையொட்டி கடற்கரைக்குச் செல்லும் பாதையில் முள்செடிகள் படா்ந்து பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அவற்றை அகற்ற வேண்டுமென சுற்றுலாப் பயணிக ள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், லீபுரம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் முள்செடிகளை அகற்றி சாலையைச் சீரமைக்கும் பணியை ஊராட்சித் தலைவி ஜெயக்குமாரி லீன் தொடங்கிவைத்தாா். பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT