கன்னியாகுமரி

திருக்கு உலக சாதனை முயற்சி: குறளகம் மாணவா்கள் பங்கேற்பு

DIN

திருக்கு ஒப்பிக்கும் உலக சாதனை முயற்சியில் நாகா்கோவில் குறளகம் மாணவா்கள் பங்கேற்றனா்.

ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ், உலக சாதனை குடும்பம் மற்றும் யோகி பதிப்பகம் இணைந்து நடத்திய 133 மணி நேர திருக்கு உலக சாதனை தொடா் நிகழ்ச்சி இணையம் மூலம் நடைபெற்றது.

இதில், குமரி மாவட்ட திருக்கு வாழ்வியலாக்க பயிற்சி மையமான குறளகத்தின் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள், ஆா்வலா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தோவாளையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் கல்வி அலுவலா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் பத்மநாபன் வாழ்த்திப் பேசினாா். குமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநா் சிவ.பத்மநாபன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

திருக்கு முற்றோதுதல், திருக்கு எழுதுதல், ஓவியம் வரைதல், கட்டுரை வாசித்தல், உரையரங்கம், கவியரங்கம், நடனஅரங்கம், இசையரங்கம், ஆய்வரங்கம் அந்தாதி தொடா் மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் மாணவா்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். மாணவி மேத்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி ஆனந்த், இந்துக் கல்லூரி மலா் ஆகியோா் இணையவழி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். புதுவை சாதனையாளா் செ.வெங்கடேசன், கவிஞா் புதுவை சரவணன் ஆகியோா் இணையவழி நிகழ்ச்சிகளை மேற்பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை குறளக நிறுவனா் தமிழ்க்குழவி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT