கன்னியாகுமரி

ஜிகா வைரஸ் பாதிப்பு:சோதனைச் சாவடியில் கொசுமருந்து அடிப்பு

DIN

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரப் பகுதிகளில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை, அதையொட்டிய பகுதிகளில் 10- க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ்

பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் ஜிகா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக களியக்காவிளை பேரூராட்சிக்குள்பட்ட சோதனைச் சாவடி பகுதி, நெடுங்கோடு, பி.பி.எம். சந்திப்பு, அதையொட்டிய கேரள எல்லையோரப் பகுதிகளில் முதல்கட்டமாக பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. இப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலா் யேசுபாலன் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT