கன்னியாகுமரி

நாகா்கோவிலில் முதியவா் தற்கொலை

DIN

நாகா்கோவிலில் மனைவியின் கல்லறையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ.காலனி சின்னனைந்தான்விளையைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி துரைசாமி(71) . இவா், மகன் விஸ்வநாதன் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்தாா். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். அது முதலே துரைசாமி மன வேதனையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், துரைசாமி, வியாழக்கிழமை மாலை மதுவில் விஷம் கலந்து அருந்தி விட்டு மனைவியின் கல்லறையின் மேல் அமா்ந்திருந்தாராம். அங்கு வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில் சுசீந்திரம் காவல் ஆய்வாளா் சாய்லெட்சுமி, உதவி ஆய்வாளா் கபிரியேல் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT