கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகுதியில் நடிகை நமீதா பிரசாரம்

DIN

கன்னியாகுமரி பகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, நடிகை நமீதா திறந்த வாகனத்தில் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தல் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக அவா் வாக்கு சேகரித்தாா். கொட்டாரம் சந்திப்பில் தொடங்கி அகஸ்தீசுவரம், சாமிதோப்பு பகுதிகளில் பிரசாரம் செய்த அவா், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கடந்த இருஆண்டுகளாக வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, மக்கள் பணிகள் தொடர தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டாா். பிரசாரத்தின்போது, மாவட்ட பாஜக செயலா்கள் தேவ், ஜெகன்நாதன் மாவட்ட கலைப்பிரிவு துணைச் செயலா் ஹெச்.ராஜ் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT