கன்னியாகுமரி

குமரி மருத்துவமனைகளுக்கு ரூ.79.66 லட்சம் நிதியுதவி

DIN

குமரி மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக வசந்த் அன் கோ மற்றும் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் ரூ.79 லட்சத்து 66 ஆயிரம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

வசந்த் அன்கோ நிறுவனமும் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து கன்னியாகுமரி, குலசேகரம் உள்பட 3 அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.79 லட்சத்து 66 ஆயிரக்கான காசோலையை விஜய்வசந்த் எம்.பி., எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தமிழக மண்டல தலைமை அதிகாரி கே.எல்.முரளி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் எ.பிரகலாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT