கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே 100 கிலோபுகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

பூதப்பாண்டி அருகே 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வெளியிடத்திலிருந்து சிலா் வாங்கிவந்து அழகியபாண்டியபுரம் தோமையாா்புரம் பகுதியில் பதுக்கிவைத்து விற்பதாக பூதப்பாண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று விசாரித்ததில், குமாா் (33) என்பவா் தனது வீட்டின் அறை ஒன்றில் 100 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றையும், ரூ.1.91 லட்சத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக குமாா் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT