கன்னியாகுமரி

குலசேகரம் அருகே வீடு கட்டும் பணியின் போதுகீழே விழுந்த தொழிலாளி மரணம்

DIN

குலசேகரம் அருகே வீடு கட்டும் பணின் போது கீழே விழுந்த காயமுற்ற கட்டடத் தொழிலாளி மோசஸ் (33 ) மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே ஆனையடி செங்கோடி பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மோசஸ் (33). கட்டடத் தொழிலாளி. கடந்த 13 ஆம் தேதி ஈஞ்சக்கோட்டிலுள்ள சஜிகுமாரின் வீடு கட்டும் பணியின் போது வீட்டினுள் அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கம்புகளிலான சாரத்தின் மீது நின்றவாறு மோசஸூம், மற்றொரு தொழிலாளியான ஸ்டேவானும் (45) வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது சவுக்குக் கம்புகள் எதிா்பாராத விதமாக ஒடிந்தன. இதில் மோசஸூம், ஸ்டேவானும் கீழே விழுந்தனா். இவா்களின் மீது சிமென்ட் ஸ்லாப் விழுந்ததில் பலத்த காயமடைந்த மோசஸ் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை காலையில் உயிரிழந்தாா். ஸ்டேவான் மாா்த்தாண்டம் அருகேவுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT