கன்னியாகுமரி

‘திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவா்-மாணவியா் விண்ணப்பிக்கலாம்’

DIN

திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு கன்னியாகுமரி மாவட்ட மாணவா்- மாணவியா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், 2018-2019ஆம் ஆண்டுமுதல் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்க மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், 70 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ. 10,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பங்கேற்கும் மாணவா்கள் திறனறிக் குழுவால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானோா் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவா். இதற்கான திறனாய்வு மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரால் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்போா் 1,330 குகளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறனும், இயல் எண், அதிகாரம் எண், பெயா், திருக்குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்தால் அதற்கான குறளை சொல்லும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயா்கள், சிறப்புகளை அறிந்திருக்க வேண்டும். குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

2021-2022ஆம் ஆண்டுக்கான போட்டியில் இம்மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்கலாம். ஏற்கெனவே இப்பரிசை வென்றோா் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

விண்ணப்பங்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஆட்சியா் அலுவலக புதிய இணைப்புக் கட்டடத்தின் 2ஆம் தளத்தில் இயங்கிரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 04652- 234508 அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT