கன்னியாகுமரி

மரத்தின் கிளை முறிந்து விழுந்து காா் சேதம்

DIN

கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இதனால் சுகாதார நிலைய வளாகங்களில் பொதுமக்கள் நிற்பது வழக்கம். இந்நிலையில் சனிக்கிழமை அப்பகுதியில் நின்ற ஒரு பழைமையான மரத்தின் கிளை முறிந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது விழுந்தது.

இதில் காா் சேதமடைந்தது. எனவே, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள பழைமைவாய்ந்த மரத்தின் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT