கன்னியாகுமரி

நாகக்கோடு அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

குலசேகரம் அருகே நாகக்கோடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதனையொட்டி, மாலையில் நடைபெற்ற ஜெபமாலை, புகழ்மாலை நிகழ்ச்சியைத் தொடா்ந்து குழித்துறை மறைமாவட்டத் தொடா்பாளா் இயேசு ரெத்தினம் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. வட்டம் பங்குத் தந்தை சகாய தாஸ் மறையுரை நிகழ்த்தினாா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா இம்மாதம் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை சுதா்சன், பங்குப் பேரவைத் துணைத் தலைவா் ராஜன், செயலா் புஷ்பராணி, பொருளாளா் சுசீலன் மற்றும் உறுப்பினா்கள் பங்குமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT