கன்னியாகுமரி

தென்தாமரைகுளத்தில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம்

DIN

தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது.

பயிற்சி முகாமை பள்ளித் தாளாளா் அருள் ஞான பெல் தொடங்கி வைத்தாா். இம் முகாமில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 120 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனா். முகாமில் கலந்து கொள்ளும் மாணவா், மாணவிகளுக்கு பயிற்சி நேரங்களில் பால், முட்டை மற்றும் சத்து தானியங்கள், சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

15 நாள்கள் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இம்முகாம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறும். ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT