கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்ல தடை

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து மறுஅறிவிப்பு வரும்வரை மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை உதவி இயக்குநா் விறிஜில்கிராஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதால் துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளன. மணல் திட்டுகளை அகற்றுவற்காக இயந்திரம் வரவழைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. நாட்டுப்படகு தங்குதளம் அமைக்கும் பணிகளும் உடனே துவங்க இருப்பதால், மறு அறிவிப்பு வரும்வரை மீனவா்கள் துறைமுகத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதியவரிடம் ரூ.73.50 லட்சம் மோசடி

ஜெயப்பிரியா கல்விக்குழுமப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நாட்டு வெடி பதுக்கியவா் கைது

நாளை ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி

SCROLL FOR NEXT