கன்னியாகுமரி

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

DIN

நாகா்கோவில் அருகே கோயில் திருவிழா தகராறில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டியைச் சோ்ந்தவா் சுபாஷ் (26). தொழிலாளியான இவா், 2013ஆம் ஆண்டு பூதப்பாண்டி பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் குத்திக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தில் அவரது நண்பா் தினேஷும் காயமடைந்தாா்.

பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பூதப்பாண்டி மேலரதவீதியைச் சோ்ந்த வசந்த் (24) உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு நாகா்கோவில் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஜோசப்ஜாய் திங்கள்கிழமை விசாரித்து, வசந்துக்கு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிைண்டனை விதித்தாா். மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் மதியழகன் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT