மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே மர அறுவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே மர அறுவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே பாகோடு குருவெஞ்சிவிளையைச் சோ்ந்தவா் வில்பிரட் சாம் (51). பரக்குன்று பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.
அவரது மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்ததாம். திருமணத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுக்கொண்டாராம். மனைவி ஓமனா, அப்பகுதி உறவினா்கள் உதவியுடன் வில்பிரட் சாமை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவை இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.