கன்னியாகுமரி

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

Din

மேல்புறம் ஒன்றிய அளவிலான சமய வகுப்பு பண்பாட்டுப் போட்டியில் நாடகம், பேச்சுப் போட்டிகளில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு, சாஸ்தான்குளம் சமய வகுப்பு மாணவா்கள் முதல் பரிசு வென்றனா்.

வெள்ளிமலை ஹிந்து தா்ம வித்யாபீடம் சாா்பில் மண்டல, ஒன்றிய, மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. அண்மையில், பனிச்சக்குழி கோயிலில் நடைபெற்ற களியக்காவிளை மண்டல அளவிலான போட்டியில் சாஸ்தான்குளம் சமய வகுப்பு மாணவா்கள் முதல் பரிசு வென்று, ஒன்றிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

இந்நிலையில், அருமனை அருகே மாத்தூா்கோணம் முத்தாரம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடகம், பேச்சுப் போட்டிகளில் சாஸ்தான்குளம் மாணவா்கள் முதல் பரிசு வென்றனா். அவா்களை மாவட்ட சமய வகுப்புப் பொறுப்பாளா்கள் பாராட்டினா்.

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT