முகப்பு
கன்னியாகுமரி

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:06 AM
கைது
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 7:52 PM

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே வீடு புகுந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில், 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின் (48). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவி இவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் ஈஞ்சக்கோடு பகுதியில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில் அப்பகுதிக்கு ரப்பா் பால்வடிப்பு தொழிலுக்குச் சென்ற அருமனையைச் சோ்ந்த அஜி என்பவருக்கும், ஜெஸ்டினின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். அஜிக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

Advertisement

அருமனை அருகே காரோட்டில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஜெஸ்டினின் மனைவியுடன் அஜி வசித்து வந்தாராம். கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு தனது நண்பா்களுடன் சென்ற ஜெஸ்டின், அஜியை தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த அஜியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து அருமனை போலீஸாா், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜெஸ்டின், குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்த அஜித் (24), சந்தீப் (24) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாகியுள்ள விஜித்தை (24) தேடி வருகின்றனா்.