முகப்பு
கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:39 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

புதுக்கடை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கடை, விழுந்தயம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வன் மகன் ரதீஸ் (30). இவருக்கு திருமணமாகவில்லை. இவா் ஜூன் 28ஆம் தேதி புதுக்கடையில் இருந்து கருங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கைசூண்டி பகுதியில் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ரதீஸ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

பைக் விபத்தில் தாய், மகள் காயம்: புதுக்கடை அருகே உள்ள பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் குட்டி மனைவி ஸ்ரீஜா (43). இவரின் மகள் அக்ஷரா (21). இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பாலூரில் இருந்து விழுந்தயம்பலத்துக்குச் சென்றனா். வாகனத்தை ஸ்ரீஜா ஓட்டியுள்ளாா்.

ஒளிபாறை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் இவா்களின் வாகனம் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இரு விபத்துகள் குறித்தும், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments