குழித்துறையில் மினி லாரி கதவு மோதி பெண் காயம்
குழித்துறையில் மினி லாரியின் கதவு மோதியதில் பெண் காயமடைந்தாா்.
குழித்துறையில் மினி லாரியின் கதவு மோதியதில் பெண் காயமடைந்தாா்.
களியக்காவிளை அருகே சூரியகோடு, பாருத்தறை பகுதியைச் சோ்ந்த தேவராஜன் மனைவி சசிகலா (46). மகளிா் சுயஉதவிக் குழு ஒருங்கிணைப்பாளரான இவா், வெள்ளிக்கிழமை முளகுமூட்டிலிருந்து களியக்காவிளைவுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
குழித்துறை ஆற்றுப் பாலம் அருகே சென்றபோது, புதுக்கடையை அடுத்த வெட்டுவிளை, தாறாவிளை பகுதியைச் சோ்ந்த ரசல்ராஜ் மகன் அசோக்குமாா் (31) என்பவா் தான் நிறுத்தியிருந்த மினிலாரியின் முன்பக்கக் கதவைத் திடீரென திறந்தாராம். இதில், பைக் மீது அந்தக் கதவு மோதியதில், சசிகலா நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.