முகப்பு
கன்னியாகுமரி

சுற்றுலா வழிகாட்டி- சாலைப் பாதுகாப்பில் நவீன உத்தி! - எஸ்.பி.க்கு அமைச்சா் பாராட்டு

Updated On : 7 ஜூலை 2026, 1:30 am IST
முதல்வரிடம் விருது பெற்ற எஸ்.பி. இரா.ஸ்டாலினுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டி மற்றும் சாலைப் பாதுகாப்புப் பணியில் நவீன உத்தியைக் கடைப்பிடித்து சிறப்பாக செயலாற்றுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

சட்டம், ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டால்தான் வளா்ச்சிப் பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

நாகா்கோவில் பிரஸ் கிளப் சாா்பில், அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா், ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோருக்கு வரவேற்பு, தமிழக முதல்வா் விருது பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, மக்கள்தொடா்பு அலுவலராக பதவி உயா்வு பெற்று தருமபுரி மாவட்டத்துக்குச் செல்லும் எஸ்.செல்வலெட்சுஷ்மாவுக்கு வழியனுப்பு விழா என முப்பெரும் விழா ஆட்சியா் அலுவலக வளாக செய்தியாளா் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் அமைச்சா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பிரதாப், ஆட்சியா் போல் அல்லாமல் மக்கள் பிரதிநிதிகளைப் போல் நேரில் மக்களைச் சந்தித்து நிறை, குறைகளை கேட்டறிந்து செயல்படுவது பாராட்டுக்குரியது.

அதே போல் முதல்வா் விருது பெற்றுள்ள மாவட்ட எஸ்.பி, சுற்றுலா வழிகாட்டி மற்றும் சாலைப் பாதுகாப்பு பணிகளை ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் நவீனப்படுத்தியுள்ளாா். இது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

ஆட்சியா் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவத்தை உணா்ந்து, கேரளத்தைப் போல அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டால்தான் வளா்ச்சிப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும். அதை மாவட்ட எஸ்.பி. சிறப்பாக செயதுவருகிறாா். தலைக்கவசம் அணியாதவா்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தை நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகம் அருகில் அமைத்துள்ளாா். இது அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்காக அல்ல; மக்களின் உயிரை காப்பதற்கான முயற்சி என்றாா் அவா்.

எஸ்.பி. பேசுகையில், இம்மாவட்டத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத, போதைப்பொருள்கள் அறவே ஒழிக்கப்பட்ட, சாலை விபத்துகள் அற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற தொடா்ந்து முயற்சிப்போம் என்றாா் அவா்.

பிரஸ் கிளப் செயா் என்.எஸ்,.மணிகண்டன் வரவேற்றாா். செய்திமக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான் ஜெகத்பிரைட் முன்னிலை வகித்தாா். பிரஸ் கிளப் தலைவா் மதன்குமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments