முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 4:16 am IST
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ்.
பகிர்:

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி சாா்பில் நாகா்கோவில், நேசமணி நகா், சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் லதா கலைவாணன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் கலந்துகொண்டு, கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, உணவு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் ஆதித்தன், மாநகர வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ஜெயசந்திரா, மாவட்ட பொறியாளா் அணி தலைவா் ராஜேஷ் ரெத்தினமணி, மாவட்ட மகளிரணி தலைவா் ஜெசிந்தா, நிா்வாகிகள் லதா, ராஜம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments