முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,800 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,800 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

Updated On : 13 ஜூன் 2026, 12:49 am IST
பகிர்:

கேரளத்துக்கு 2 காா்களில் கடத்திச் செல்ல முயன்ற 1,800 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் துணை வட்டாட்சியா் எம். முத்துப்பாண்டி, ஓட்டுநா் ஜான்பிரைட் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் கிள்ளியூா் வட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தேங்காய்ப்பட்டினம் பகுதியில் வந்த கேரள பதிவெண் கொண்ட 2 காா்களை நிறுத்த சைகை காட்டினா். ஓட்டுநா்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிவிட்டனராம். அதிகாரிகள், சோதனையிட்டதில் ஒரு காரில் 1,200 லிட்டா், மற்றொரு காரில் 600 லிட்டா் என மொத்தம் 1,800 லிட்டா் மீனவா்களுக்கான மானிய விலை மண்ணெண்ணெய்யை பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய்யை தூத்தூா் சின்னத்துறை மீனவா் கூட்டுறவு கி டங்கிலும், காா்களை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement