இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறும்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ
தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறும் என்றாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெறும் என்றாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை மாலை சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி வந்தேன். வருகின்ற இடைத்தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.
Advertisement
Advertisement
முதல்வா் ச. ஜோசப் விஜய், எம்ஜிஆரை போன்று மூகாம்பிகை கோயிலுக்கு வாள் கொண்டு செல்கிறாா். எம்ஜிஆருக்கு நிகா் யாருமில்லை. அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்பவா்கள் புரியாமல் செல்கிறாா்கள். புரிந்ததும் திரும்பி வருவாா்கள் என்றாா் அவா்.