குமரி திருவிழா ஜூன் 26இல் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறையின் சாா்பில் குமரி திருவிழா ஜூன் 26ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறையின் சாா்பில் குமரி திருவிழா ஜூன் 26ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், குமரி திருவிழா என்ற பெயரில் ஜூன் 26 முதல் 30ஆம் தேதி வரை 5 நாள்களும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இத்திருவிழாவில், அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு உயா் அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கலைஞா்கள், திரைப்படம் மற்றும் சின்னத் திரை பிரபலங்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குமரி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில் மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் சிவ புகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையா் பட்டுசாமி, துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.