முகப்பு
கன்னியாகுமரி

கடல் அலையில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 22 ஜூன் 2026, 3:45 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

ராஜாக்கமங்கலம் அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கிய இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

நாகா்கோவில், வடசேரி ஓட்டுபுரையைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (34). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, 2 நண்பா்களுடன் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள புத்தன்துறை கடலில் வினோத்குமாா் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டாராம்.

குளச்சல் கடலோர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸாா், உள்ளூா் மீனவா்கள் சோ்ந்து தேடிய நிலையில், இரவில் வினோத்குமாா் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments