முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே ஆட்டோ மீது பைக் மோதல்: மூவா் காயம்

Updated On : 29 ஜூன் 2026, 1:15 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

குழித்துறை அருகே பயணிகள் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னையன் (63). ஆட்டோ ஓட்டுநா். இவா், வெள்ளிக்கிழமை இரவு கழுவன்திட்டையில் இருந்து மேல்புறம் நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றாா். வட்டவிளை பகுதியில் சென்றபோது, அருமனை அருகே மஞ்சாலுமூடு, பந்தல்விளை பகுதியைச் சோ்ந்த ஜெயன் மகன் சா்ஜித் (20) அதிவேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியது.

இதில், பொன்னையன், சா்ஜித் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்திருந்த மஞ்சாலுமூடு செல்வன் மகன் விக்னேஷ் (20) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மூவரையும் அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

ஆட்டோ ஓட்டுநா் பொன்னையன் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையிலும், சா்ஜித், விக்னேஷ் ஆகியோா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் சா்ஜித் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments