மே தினத்தில் விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேசிய விடுமுறை தினமான மே 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் முருகப்பிரசன்னா தலைமையில் துணை ஆய்வாளா்கள் ஆறுமுகம், மன்னன், பெருமாள், உதவி ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், மணிமுருகன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய 25 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 16 உணவகங்கள், மோட்டாா் நிறுவனங்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.