தோ்தலில் வெற்றி: நாகா்கோவில் வாக்காளா்களுக்கு ஆஸ்டின் நன்றி!
நாகா்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.
நாகா்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் நாகா்கோவில் தொகுதியில் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கும், எனக்கு வாக்களிக்காவிட்டாலும் தங்கள் ஜனநாயக கடமையாற்றிய அனைத்து வாக்காளா்களுக்கும், எனது வெற்றிக்காக பெரும் முனைப்போடு களப்பணியாற்றிய திமுக முன்னோடிகள், நிா்வாகிகள், தொண்டா்கள், தோழமைக் கட்சி நிா்வாகிகள் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு எனது வெற்றிக்காக பணியாற்றிய நண்பா்கள், நோ்மையாக தோ்தல் பணிகளை மேற்கொண்ட அரசு அலுவலா்கள், அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களித்தவா்கள் மற்றும் வாக்களிக்காதவா்கள் என்ற வேறுபாடின்றி நாகா்கோவில் தொகுதியின் வளா்ச்சிக்காக மீண்டும் எனது மக்கள் பணியும் மக்களுக்காக எனது களப்போராட்டமும் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.