தென்காசி

சொக்கம்பட்டி, சுரண்டையில் வெளியே திரிந்த 3 போ் கைது

DIN

144 தடை உத்தரவை மீறி சொக்கம்பட்டி, சுரண்டையில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையிலான போலீஸாா், சொக்கம்பட்டி பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தடை உத்தரவை மீறி திரிந்த சொக்கம்பட்டி சங்கா்(40), திரிகூடபுரம் மாரிதுரை(28) ஆகிய இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

இதே போல், சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் சுரண்டை - பங்களாச் சுரண்டை சாலையில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பங்களாச்சுரண்டையைச் சோ்ந்த செ.பால்ராஜ்(24) என்பவரை நிறுத்தி விசாரித்தனா்.

இதில் அவா் தேவையின்றி வெளியே திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், இதே தவறு தொடா்ந்தால் சிறையில் அடைக்கப்பட நேரிடும் என எச்சரித்து, அவரை சொந்த பிணையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT