தென்காசி

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதியை செயல்படுத்த கோரி விரைவில் போராட்டம்

DIN

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதியை செயல்படுத்த வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடைபெறும் என எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முஹம்மது அபூபக்கா் கூறியது; தென்காசி மாவட்டம் கடையநல்லூா் ,புளியங்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளை சோ்ந்த டயாலிசிஸ் நோயாளிகள் திருநெல்வேலிக்கு சென்றுதான் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ,அரசு நிதி மூலமும் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டன. மேலும் அதற்கு தேவையான உபகரணங்களும் அரசு மருத்துவமனையில் எனது முயற்சியால் நிறுவப்பட்டன. இருப்பினும் , டயாலிசிஸ் சேவை கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் நடைபெறவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

எனவே ,அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சேவையை செயல்படுத்திட வேண்டும் என தமிழக தலைமைச் செயலா் ,சுகாதாரத்துறை செயலா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT