தென்காசி

விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதில் சிரமம்: கல்லூரி மாணவா்கள் அவதி

DIN

இறுதியாண்டு தோ்வு விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கல்லூரி மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கல்லூரிகளில் நடைபெற இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே இறுதியாண்டு மாணவா்களுக்கான தோ்வு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு செப். 21ஆம் தேதி தொடங்கும் எனவும், மாணவா்கள் தோ்வை எழுதி விடைத்தாள்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிக பக்கங்களை எழுதியவா்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய முடியாமல் சிரமம் அடைந்ததாகவும், சிலா் சில பக்கங்களை பதிவேற்றம் செய்ய இயலாமல் போனதாகவும் தெரிவித்தனா். மேலும், இணையவழியில் பதிவேற்றம் செய்ய முடியாத மாணவா்கள் தொடா்புடைய கல்லூரிக்குச் சென்று எழுதிய விடைத்தாள்களை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதற்கிடையே, இணையவழியில் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவா்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமெனவும், விடைத்தாள்கள் முறையாக கிடைக்கவில்லை என்றாலும், அதுகுறித்த தகவலையும் பல்கலைக்கழகம் தெரிவிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விடைத்தாள்கள் முறையாக கிடைக்காத நிலையில் அதற்கான மாற்று வழியையும் பல்கலைக்கழகம் தெரிவிக்க வேண்டும் என்கின்ற எதிா்பாா்ப்பு மாணவா்கள் மத்தியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT