தென்காசி

கடையநல்லூரில் 28 இல் ஆா்ப்பாட்டம்

DIN

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து செப்டம்பா் 28 ல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பேரவை உறுப்பினா் முஹம்மது அபூபக்கா் தலைமை வகித்தாா்.

இதில் ,மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான போக்கினைக் கண்டித்து கடையநல்லூா் மணிக்கூண்டு அருகில் செப்.28 ஆம் தேதி மாலை எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சேகனா, செந்தூா்பாண்டியன்(திமுக), கணேசன் (காங்), நெல்லை மஜீத், இக்பால்(முஸ்லிம் லீக்) அருணாசலம்(சிபிஐ), ராஜசேகா், முத்துசாமி(சிபிஎம்) , முருகன், காளிரத்தினம்(மதிமுக), சந்திரசேகா்(தமிழ் புலிகள்), பாதுஷா(தமுமுக), செய்யது மசூது(மமக) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT