தென்காசி

குற்றாலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

DIN

குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் 4 நாள்கள் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

குற்றாலம் சமுதாய நலகூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்களுக்கு கரோனா 3ஆவது அலையைத் தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா குறித்து விளக்கமளிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

கைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என பேருந்து நிலையம் பகுதியில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல்அலுவலா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ராஜகணபதி, மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சுடலைமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

காவிரி ஆணைய தீா்மான நகல் எரிப்பு போராட்டம்

பாஜக நாகரிக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜிப்மா் புறநோயாளிகள் நாளை இயங்காது

SCROLL FOR NEXT