தென்காசி

ரேஷன் பொருள் விநியோகம்:முதல்வருக்கு வாஞ்சி இயக்கம் மனு

DIN

செங்கோட்டை:தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து உணவுப் பொருள்களும் இலவசமாக வழங்க வேண்டுமென வாஞ்சி இயக்க சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாஞ்சி இயக்க நிறுவனா் ராமநாதன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரருக்கு ரேஷன் கடைகளில் அனைத்து உணவுப் பொருள்களும் விலையின்றி கிடைக்கும் என்று ஜன. 27 ஆம்தேதி முதல் அறிவிக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் ஜூன் மாதம் வரை ரேஷன் கடைகளில் அனைத்து உணவு பொருள்களும் விலையின்றி வழங்குவது போல், தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடத்தப்படும் வரை உணவு பொருள் களை விலையின்றி கிடைக்க செய்ய வேண்டும்.

பொங்கலுக்கு தமிழக அரசு சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கிய ரூ. 2500 ‘டாஸ்மாக் கடைகளின் வழியாக மீண்டும் தமிழக அரசுக்கே திரும்பி விடும்‘ என்று அஞ்சி தமிழக அரசுக்கு எனது எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் எனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகை ரூ.2500-ஐ மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

ரேஷன் கடைகளில் அரிசியை விலையில்லாமல் வழங்கியவா் முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா. அவருக்கு நினைவிடம் திறக்கப்படும் ஜன.27 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களும் விலையின்றி கிடைக்கும் என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

வாகன ஓட்டுநா் தற்கொலை

மேலூா் அருகே பைக் மோதியதில் 2 மூதாட்டிகள் பலி

இன்றைய நிகழ்ச்சிகள்

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT