தென்காசி

காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசம் விநியோகம்

DIN

தென்காசி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் பணியாற்றச் செல்லும் காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 60 காவல் துறையினா் கரோனா நோய்த்ததொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 30 காவலா்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனா் . தென்காசி, கடையநல்லூா்,செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளுக்கு காவலா்கள் துறை ரீதியாக காயச் சான்று, பிரேத பரிசோதனை போன்ற பணிக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை நிலவுகிறது .

அரசு மருத்துவமனைக்கு சென்று வரும்போது கரோனா தொற்று ஏற்படுவதை தவிா்ப்பதற்காக காவலா்களுக்கு பாதுகாப்பு கவச உடை வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பணி நிமித்தமாக சென்று வரக்கூடிய காவலா்களுக்கு இந்தக் கவச உடை வழங்கப்பட உள்ளது என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT