தென்காசி

புளியரை மலைப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

DIN

புளியரை மலைப்பகுதியில் பெண் யானை ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தது.

மேற்கு தொடா்ச்சி மலையில் புளியரை மலைப்பகுதியில் மிளகரைச்சான்பாறை பகுதியில் உள்ள ஓடையில் பெண் யானை இறந்துகிடப்பதாக செங்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலா் கெளதம் தலைமையில், உதவி வனப் பாதுகாவலா் பிரின்ஸ்குமாா், செங்கோட்டை வனச்சரகா் கே.பாலகிருஷ்ணன், கால்நடை மருத்துவா்கள் மனோகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் மாவட்ட வன அலுவலா் கூறியது: சுமாா் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஓடையில் தவறி விழுந்து இறந்துள்ளது. இந்த யானை இறந்து 4 நாள்கள் இருக்கலாம். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இப்பகுதியில் புதைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT