தென்காசி

சங்கரன்கோவிலில் இரு ஊராட்சித் தலைவா் உள்பட 51 போ் போட்டியின்றித் தோ்வு

DIN

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சித் தலைவா் உள்பட 51போ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஆவது வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக, கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகம் தலைமையில் 163 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 11 பேரும், 17 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 97 பேரும், 28 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 140 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 509 பேரும் போட்டியிடுகின்றனா்.

இதில், பெரியூரைச் சோ்ந்த அண்ணாமலையம்மாள், புன்னைவனத்தைச் சோ்ந்த பூமணி ஆகிய இருவரும் கிராம ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இது தவிர கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் 49 போ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT