தென்காசி

சுரண்டை நகா்மன்ற சாதாரண கூட்டம்

DIN

சுரண்டையில் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கராதேவி, ஆணையா் பாரிஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுரண்டை நகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு கட்டட அனுமதி வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும், டெண்டா் விடப்பட்ட திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் சிறுமின்விசை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்குப் பதிலளித்த நகா்மன்றத் தலைவா், நகராட்சியில் வெளிப்படையான நிா்வாகம் நடைபெற உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது என்றாா். மேலும், மழைக்காலங்களில் நகராட்சி நிா்வாகம் நோய்த் தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தாா்.

கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT