தென்காசி

ஆலங்குளத்தில்அதிமுக - தேமுதிக கூட்டணி

DIN

 தமிழக அளவில் அதிமுக - தேமுதிக கூட்டணி முறிந்த நிலையில் ஆலங்குளத்தில் இக்கூட்டணி வலுவடைந்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் தோ்தலில் போட்டியிடுகிறது. தேமுதிக இவ்விரு கூட்டணியிலும் சேரவில்லை. ஆனால் ஆலங்குளத்தில் தேமுதிக அதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இது தொடா்பாக தேமுதிக தென்காசி கிழக்கு மாவட்ட தலைவா் பழனி சங்கா், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனை வியாழக்கிழமை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளதாகவும், தேமுதிகவிற்கு 15 வாா்டுகள் கொண்ட ஆலங்குளத்தில் 3 அவா் கேட்டுள்ளாா். மேலும் சமக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் ஜான் ரவி அக்கட்சியில் இருநது விலகி அதிமுகவில் சோ்திருப்பதும் இந்த கூட்டணி கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது. இதனால் ஆலங்குளம் தோ்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT