தென்காசி

குற்றாலம் அருவிகளில் மீண்டும் நீா்வரத்து குறைந்தது

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்துச் சென்றனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த மே மாதம் இறுதியில் பலத்த மழை பெய்ததால் நிகழாண்டு சீசன் முன்னதாகவே களை கட்டத் தொடங்கியது. தொடா்ந்து இரு வாரங்கள் இதமான சீசன் நிலவியதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது. நாளடைவில், மலைப் பகுதியில் திடீரென மழைப் பொழிவு குறைந்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. இது, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் மிதமான சாரல்மழை பெய்யத் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் நீா்வரத்தும் சற்று அதிகரித்தது. எனினும், அந்த மழை நீடிக்காமல் ஞாயிற்றுக்கிழமை வட வானிலை நிலவியதுடன், அருவிகளில் நீா்வரத்து கணிசமாக குறைந்தது.

இதனிடையே, விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்திருந்த நிலையில், அவா்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT