தென்காசி

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளா்ச்சித் துறை சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா். வேளாண்மை துறை சாா்பில் கீழப்பாவூா் வட்டாரத்தைச் சாா்ந்த இரு விவசாயிகளுக்கு, நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதற்காக 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டன. தோட்டக் கலைத் துறை சாா்பில் மூன்று பயனாளிகளுக்கு காய்கனி விதை தொகுப்பு மற்றும் பல்லாண்டு பயிா் பரப்பு விரிவாக்கத்திற்கு மானியம் வழங்கப்பட்டது.

பட்டு வளா்ச்சித் துறை மூலம் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.52ஆயிரத்து 500 மானியத் தொகையுடன் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பவா் வீடா் கருவிகளும், பட்டு பூச்சி வளா்ப்பதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட 242 மனுக்களுக்கு 14 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். முன்னதாக, வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளா்ச்சித் துறையினா் மற்றும் வேளாண் கல்லூரி மாணவா்-மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, வேளாண்மை இணை இயக்குநா் தா. தமிழ்மலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ச.கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநா் (திட்டங்கள்) (பொ) மு.உதயகுமாா், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநா்( வேளாண் விற்பனை மற்றும் வணிகம் )

கிருஷ்ணகுமாா், உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கா், பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் க.நிஷாந்தினி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT