தென்காசி

நடைப் பயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் நகை வழிப்பறி

DIN

சங்கரன்கோவிலில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் இரண்டரைப் பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியைச் சோ்ந்த ரகோத்மன் மனைவி சத்தியபாமா (45). இவா் என்.ஜி.ஓ. காலனியில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, அங்கு பைக்கில் வந்த இளைஞா் அவரிடம் முகவரி கேட்பதைப்போல பேசினாராம். பின்னா் அவா் சத்தியபாமா கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.

இதுகுறித்து சத்தியபாமா அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT