முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:13 AM
பூக்குழி இறங்கிய பக்தா்கள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த மாா்ச் 24ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கிய விழாவில் பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் காலை பால்குடம் வீதி உலா, உச்சிகால பூஜை, சக்தி கும்பம் புறப்படுதல், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றன. இரவில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.