முகப்பு
தென்காசி

கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் பூக்குழி விழா

Updated On : 30 மே 2026, 3:33 am IST
பூக்குழி இறங்கிய பக்தா்.
பகிர்:

கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி நடைபெற்றது.

இக்கோயிலின் பூக்குழி திருவிழா கடந்த 21ஆம்தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

28 ஆம் தேதி தீா்த்தகுடம், பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முளைப்பாரி, அக்னி சட்டி ஊா்வலமும், தொடா்ந்து பூக்குழியும் நடைபெற்றது. விரதமிருந்த பக்தா்கள் அக்னி சட்டியுடன் பூக்குழி இறங்கினா்.

Advertisement

Advertisement