முகப்பு
நாகப்பட்டினம்

ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா

நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Updated On : 21 மே 2026, 7:17 am IST
திருவிழாவில் பூக்குழி இறங்கும் பெண்.
பகிர்:

நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஆலங்குடியில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசித் திருவிழா மே 15- ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காவடி, மாவிளக்கு, அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா ( தீமிதி) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Advertisement

Advertisement

விரதமிருந்து காப்புக்கட்டிய 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது.

விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.