திருநெல்வேலி

ஆஸ்திரேலிய பல்கலை.யில் பயில நெல்லை மாணவருக்கு வாய்ப்பு

DIN

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக ஐஎம்டிபி திருநெல்வேலி கிளை வெளியிட்ட அறிக்கை: ஐஎம்டிபி நிறுவனம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்,  முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் திருநெல்வேலி பயிற்சி மையத்தில் பயின்ற திருநெல்வேலி மாணவர் பேராச்சி ஹரிஹரசுதனுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மெக்கட்ரானிக்ஸ் படிக்க சேர்க்கைச் சான்றிதழும், நுழைவு அனுமதிச் சீட்டும் கிடைத்துள்ளது. அவற்றை கிளையின் ஆலோசகர் சத்யசீலன், மேலாளர் ருத்ரகுணசீலன் ஆகியோர் வழங்கினர். மேலும், அந்த மாணவர் படித்துக் கொண்டே பகுதி நேரமாக வேலைபார்க்கவும், ஆஸ்திரேலியாவில் தங்கி நிரந்தர வேலை தேடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஐஎம்டிபி நிறுவனம் சார்பில் IE​L​TS, TO​E​FL, GRE, GM​AT, SAT, PT போன்ற சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT