திருநெல்வேலி

சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி பாதுகாப்பு கோரி ஆட்சியர், எஸ்பி-யிடம் மனு

DIN

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் உமாவசந்தி (24). இவர், கோவையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது, மாஞ்சோலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலில் கடந்த 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். ஆட்சியர் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, தமிழர் விடுதலைக்களம் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட செயலர் வே.ச. முத்துக்குமார் கூறியது:
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மதுரையில் தனியாக பிரிவு தொடங்கி காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், தொடர்புடைய வழக்குகளை விசாரணை நடத்தவும் தனிப்பிரிவு தொடங்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பால் விலை, சுங்கச்சாவடி கட்டண உயா்வால் மக்கள் மீது கூடுதல் சுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மாற்றம் ஒன்றே மாறாதது..!

கருணாநிதி பிறந்த நாள்: திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள்

எழும்பூா் - மங்களூரு ரயில் கோவை செல்லாது

புதுக்கடை அருகே சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT