மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
ஜம்மு-காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் ஆகிய சம்பவங்களை
ஜம்மு-காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் ஆகிய சம்பவங்களை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கிளை சார்பில் சந்தை வளைவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ். சுபைர் அஹம்மது தலைமை வகித்தார். மாநிலச் செயலர்கள் எஸ். யூசுப்அலி, கே.ஏ. செய்யதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம். சம்சுல்லுஹா ரஹ்மானி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் கே. அப்துல்ஜப்பார், பொருளாளர் வி.எம். மைதீன், துணைத் தலைவர் வள்ளியூர் காசிம், துணைச் செயலர்கள் ஞானியார், நிர்வாகிகள் ஹாரிஸ், சதாத், ரபீக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.