அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய விளையாட்டு, கோலம், அடுப்பில்லா சமையல் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய விளையாட்டு, கோலம், அடுப்பில்லா சமையல் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அரசு அருங்காட்சியகத்தில் கலைநயமிக்க சேலை பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் 3 தினங்கள் நடைபெற்றன. இப்பயிற்சியில் உருவாக்கிய சேலைகளின் கண்காட்சி, பெண்களுக்கு அடுப்பில்லா சமையல், கோலம் வரைதல் போட்டிகள், சிறுவர்களுக்கான தாயம், பல்லாங்குழி, பாண்டி, தட்டாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. போட்டிகளில் பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்கள், சிறுவர்களுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் ச. கலாவதி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல்துறைத் தலைவி சித்தி ஜமீலா ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து கவிஞர் கோ. கணபதிசுப்பிரமணியன் பேசினார்.
நிகழ்ச்சியில், கைவினைக் கலைஞருக்கான கைத்திறன் போட்டியில் தமிழக முதல்வரிடம் பதக்கம் பெற்ற ராதிகாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்போர் சங்கத் தலைவி மங்களாதேவி, செயலர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.